Regional02

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இன்று மாணவர் சேர்க்கை

செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகள் அல்லாத அனைத்து அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்பில் சேர இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 176 பள்ளிகளில் 1,289 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக இணையதளம் மூலம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றைக்கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (12-ம் தேதி) காலை 9.30 மணிக்கு கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் காலை 9 மணிக்கு சென்று, குலுக்கல் முறை தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் வீதம் காத்திருப்பு பட்டியல் பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 15-ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். குலுக்கல் நடைமுறையில் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் கலந்துகொள்ளலாம் என்று, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 15-ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT