தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள 2 நகைக் கடைகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, இரவு 12.30 மணி வரை நீடித்தது.
இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினரின் சோதனை நீடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நகை விற்பனை, வருமான வரி செலுத்திய தகவல் போன்றவற்றை வருமான வரித் துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், இதில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் இந்த சோதனை நடப்பதால், மற்ற நகைக் கடை உரிமையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.