தமிழக முதல்வர் கே.பழனிசாமி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன நேரியியல் முடுக்கி கருவி மற்றும் மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை நேற்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.39.09 கோடி மதிப்பிலான 18 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 328.66 கோடி மதிப்பிலான 29 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
2 தொழில் பூங்காக்கள்
விளாத்திகுளம் வட்டம், வைப்பார் கிராமத்தில் தொழில் பூங்கா அமைக்க 1,019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்சிப்காட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.2,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் - பாளையங்கோட்டை வரை 50 கிலோ மீட்டருக்கு ரூ. 165 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தொழில் முதலீடு
கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் ரூ.30 கோடி, கீழவைப்பாரில் ரூ. 12.20 கோடியில் தூண்டில் பாலம் விரிவாக்கம், ஆலந்தலையில் ரூ.52.60 கோடி மற்றும் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது.
தாமிரபரணி உபரிநீர்
2,000 மினி கிளினிக்
வீரமாமுனிவருக்கு மணிமண்டபம்
கோவில்பட்டியில் முதல்வருக்கு வரவேற்பு
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் கே.பழனிசாமி, கோவில்பட்டி வழியாக காரில் விருதுநகர் சென்றார்.
குறுக்குச்சாலை விலக்கில் முதல்வருக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் எட்டயபுரத்தில் அதிமுகவினர், விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே திட்டங்குளம் விலக்கில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் ராஜவேல், தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைச்சர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.