Regional01

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் உழவர் சந்தைகள் திறப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணைஇயக்குநர் பிரேம்சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனு மதி வழங்கியுள்ளது.

கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டு, இன்று முதல் (நவ.11) கடலூர் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும். அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே உழவர் சந்தைக்குள் அனு மதிக்கப்படுவார்கள். உழவர்சந்தைக்கு வெளிப்புறம் சாலையோர கடைகள் செயல்பட காவல்துறை மூலம் தடை விதிக்கப்பட்டுள் ளது. விவசாயிகள் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனை வரும் உழவர்சந்தை வளாகத்தில் அனுமதிக்கப்படுவர்.

SCROLL FOR NEXT