சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடைபெற்ற விழாவில் இஎஸ்ஐ மருந்தகங்களை அமைச்சர் எம்.சி. சம்பத் திறந்து வைத்தார். அருகில் எம்எல்ஏ பாண்டியன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி. 
Regional01

சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலத்தில் புதிதாக இஎஸ்ஐ மருந்தகங்கள் திறப்பு அமைச்சர் எம்.சி சம்பத் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருந்தகங்களை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

இந்த இஎஸ்ஐ மருந்தகங்கள் மூலம் மாதம் ரூ.21 ஆயிரத்துக்கு கீழ் ஊதியம் பெறும் தனியார் தொழிலாளர் கள் மற்றும் அவர்களின் குடும்பத்தி னர்கள் பயன்பெறலாம்.

கடலூர், நெய்வேலி, நெல்லிக்குப்பம் மற்றும் வடலூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே இஎஸ்ஐ மருந்த கங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக திறக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருந்தகங்கள் மூலம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 3,803 தொழி லாளர்கள், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 3,918 தொழிலாளர்கள், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 3,970 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அசோக்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT