Regional01

கருங்காலிப்பட்டில் நகை திருடிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டு கிராமத்தில் நேற்று போலீஸார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகப் படும்படியாக வந்தவரிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில்,அவர் புதுச்சேரி மாநிலம் சணத்துமேடு ஜெய்கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த விஜி (24) என்பதும், அவர்கருங்காலிப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் பக்தவச்சலு என்பவரது வீட்டில் 18 பவுன்நகை திருடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கூட்டேரிப்பட்டில் பைக் திருடியுள்ளார். ஆரோவில் பகுதியில் அவர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து விஜியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த 8 பவுன் நகையை மீட்டனர்.

SCROLL FOR NEXT