கடலூர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க, மாவட்டம் முழுவதும் 20 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. பலர் முகக்கவசம் அணிவதில்லை. பல இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படுவதில்லை.
இந்நிலையில் கண்காணிப்பு குழுவினர், மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாத 986 பேர், சமூக இடைவெளி பின்பற்றாத 169 பேருக்கு அபராதம் விதித் தனர். மேலும், கரோனா விதி முறைகளை பின்பற்றாத 18 வணிகநிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சத்து 87 ஆயிரத்து 900 அபராதம் விதித்து, அதை வசூலித்துள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக் கும் வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங் களை கண்காணிப்புக் குழுவினர் கூடுதலாக கண்காணித்து வரு கின்றனர்.