மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்ட அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகள் சேர்க்கைக்கு இரண்டாம் சுற்று குலுக்கல் நாளை (நவ.12) நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் 443 பள்ளிகளில் 5,752 இடங்களுக்கு அக்.1-ம் தேதி நடந்த குலுக்கலில் 159 மெட்ரிக் பள்ளிகள், 284 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 3852 இடங்களில் குழந்தைகள் சேர்க்கை மேற் கொள்ளப்பட்டது. மீதமுள்ள 77 மெட்ரிக் பள்ளிகள், 244 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 1,900 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இச்சேர்க்கைக்கான விண்ணப்பம் இணை யதளத்தில் அக்.12 முதல் நவ.7 வரை பதிவேற்றம் செய்யப்பட்டது.
காலியாக உள்ள இடங்களுக்கு நவ.12-ம் தேதி 2-வது சுற்றில் அந்தந்தப் பள்ளிகளில் நியமன அலுவலர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற உள் ளது.
எனவே, குழந்தைகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை (நவம்பர் 12) நடைபெறும் 2-வது சுற்றுக் குலுக்கலில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.