மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி மாமூல் பணம் வசூலிப்பதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, குமரகுரு, ஆம்புரூஸ் ஜெயராஜ், சூரியகலா அடங்கிய குழுவினர் நேற்று மாலை ஒன்றிய அலுவலகத்துக்குள் சென்றனர்.
அங்கு அலுவலர்களின் மேஜை டிராயர், அவர்களது வாகனங்களில் சோதனை செய்தனர்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அழகுபாண்டியிடம் இருந்து ரூ.30 ஆயிரம், அலுவலக உதவியாளர் அருள் பிரகாசத்திடம் இருந்து ரூ. 21 ஆயிரம், ஓட்டுநர் தங்கத்திடமிருந்து ரூ.12 ஆயிரம் மற்றும் அலுவலகத்துக்குள் வீசப்பட்ட ரூ.10 ஆயிரம், ரூ.48 ஆயிரம் என மொத்தம் ரூ.1.21 லட்சம் சிக்கியது.
முதல்கட்ட விசாரணையில் தீபாவளியையொட்டி ஊராட்சிச் செயலர்களிடமும், அலுவலகத்துக்கு வரு வோரிடமும் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.