Regional02

தேனி உழவர் சந்தை பழைய இடத்துக்கே மாற்றம்

செய்திப்பிரிவு

கரோனாவைத் தடுக்க பெரியகுளம் சாலை யில் செயல்பட்ட தேனி உழவர்சந்தை சுக்குவாடன்பட்டிக்கு மாற்றப்பட்டது. புறநகர் பகுதியாக இருந்ததால் விற்பனை குறைந்தது. இதனால், மீண்டும் உழவர்சந்தையிலேயே காய்கறிக் கடைகளை வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து முன்பு இருந்த இடத்திலேயே இன்று முதல் காய்கறிக் கடைகள் செயல்பட உள்ளன.

SCROLL FOR NEXT