மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சந்தேகத்துக்குரிய கண்டெய்னர் லாரி ஒன்று சிக்கியது. அதைச் சோதனை செய்தபோது, சுமார் 350 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநர் மலைச்சாமியை போலீஸார் கைது செய்து, லாரி, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காவல் துணை ஆணையர் சிவபிரசாத் கூறியதாவது, இது தொடர்பாக உசிலம்பட்டி கட்டத் தேவன்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி(29) என்பவரைக் கைது செய்துள்ளோம். மேலும் சிலரைத் தேடி வருகிறோம்.
மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சுமார் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. நகரில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.