திமுக இணைய வழி உறுப் பினர் சேர்க்கை மூலம் மதுரை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களாக 70 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட திமுக செய லாளர்கள் பி.மூர்த்தி, கோ.தள பதி, எம்.மணிமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக நடத்தும் ‘எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் கீழ் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை மூலம் 57 நாட்களில் 20 லட்சத்துக்கு மேல் புதிதாக இணைந்துள்ளனர். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.
மதுரை மாநகரில் மட்டும் 40,776 பேர் இணைந்துள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவர். மாவட்டத்தில் மொத்தமாக 70,412 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை 1 லட்சமாக உயர்த்துவோம். புதிய உறுப்பினர்கள் அதிமுக அரசை அகற்ற ஆர்வமாக உள்ளனர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தீர்மானம் இல்லாமல், ஒப்பந் தப் புள்ளிகள் மூலம் தவறான நோக்கத்துடன் பணம் எடுக்கப் படுகிறது. ஊராட்சி ஒன்றியப் பொதுநிதி தவறான வழியில் செலவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தமிழன்னைக்கு ரூ.100 கோடியில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கையை அதிமுக அரசு பாதியாகக் குறைத்துவிட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வணிகர் சங்கங்கள், பொதுமக்களுடன் இணைந்து திமுக போராடியது. இதற்காக ஒரு அதிமுக எம்எல்ஏ. கூட குரல் கொடுக்காத நிலையில், திட்ட அறிவிப்பு வந்தவுடன் தங்களால்தான் வந்ததாகத் தவறான பிரச்சாரத்தை மேற் கொள்கின்றனர். கரோனா குறித்து பேசும் அதிமுக.வினர் முதல்வர் நிகழ்ச்சிக்கு ஏராளமானோரை திரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.