ஆத்தூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த இரு ஆண்களின் சடலத்தை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் அடுத்த கருமந்துறை செல்லக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத் துக்கு வேல்முருகனின் தம்பி அண்ணாமலை நேற்று சென்றார். அப்போது, கிணற்றில் இரு ஆண்களின் சடலங்கள் மிதந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் கருமந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸார் அங்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த இரு ஆண்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந் தவர்கள் செல்லக் குறிச்சி பகுதியைச் சேர்ந்த நடராஜ் (50). ஆண்டி (50) என்பது தெரிந்தது.
கிணற்றின் அருகே மதுபாட்டில் இருந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவில் இருவரும் கிணற்றின் அருகே மது அருந்திய நிலையில், தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் அல்லது உயிரிழப்புக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.