வட கிழக்குப் பருவமழையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.
ஆத்தூர் அடுத்த ஊனத்தூர் கிராமத்தில் கலியன் என்பவரின் வீட்டுச் சுவர் மழையின்போது இடிந்து விழுந்தது. இதில், கலியனின் மனைவி பெரியம்மாள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெரியம்மாளின் மகன் ராமசாமி யிடம் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை, கெங்கவல்லி எம்எல்ஏ மருதமுத்து, ஒன்றியக் குழு தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் கோட்டாட்சியர் துரை வழங்கினார். வட்டாட்சியர் அன்பு செழியன், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.