Regional01

ஈரோட்டில் அருங்காட்சியகம் திறப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தில் பழமையான பொருட்கள், கல்வெட்டுகள், கற்சிலைகள், பழங்கால நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட அருங்காட்சியகம், நேற்று மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பார்வையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற, தரையில் அடையாளங்கள் போடப்பட்டு உள்ளன. நுழைவுக்கட்டணம் கியூ. ஆர்.கோடு மற்றும் வங்கி அட்டைகள் மூலமும் பெற புதிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT