Regional02

சிறப்பு முகாம் கைதிக்கு கஞ்சா: பெண் கைது

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்திலுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத் தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மனைவி முத்துமாரி(48). இவர், நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர் ஒருவரைப் பார்க்க வந்தபோது, அவருக்கு 10 கிராம் கஞ்சாவைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதைக் கண்டறிந்த சிறை பாதுகாப்பு போலீஸார், முத்து மாரியைப் பிடித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT