Regional01

நெல்லையில் தமமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் சமூகத்திலிருந்து வெளியேற்றி, தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜசோழன், மாணவரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டியன், மகளிரணி செயலாளர் வசந்தி முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலை கொற்றம் தலைவர் வியனரசு, தொழிற்சங்க பொதுச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT