துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாய் - மதுரை இடையே விமானம் இயக்கப்படுகிறது.
இந்த விமானம் மூலம் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளின் உடமைகளை, மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, திருச்சியைச் சேர்ந்த முகமது பாரூக் (45) என்பவர் கொண்டு வந்திருந்த குளிர்சாதன இயந்திரத்துக்குள் காப்பர் கம்பிக்குப் பதிலாக சுமார் 300 கிராம் எடையுள்ள தங்கத்தை கம்பிபோலச் செய்து மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.
அதன் மதிப்பு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.