தமிழகத்தில் ஊராட்சிக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரிய வழக்கில், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய 830 நேரடி கொள்முதல் நிலையங்களே உள்ளன. இது போதுமானதாக இல்லை.
இதனால் தமிழகத்தில் ஊராட்சிக் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தார் ப்பாய், செட் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசா ரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 935 கிடங்குகள் அமைக்கப் பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரை எதிர் மனுதாரராகச் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.