Regional01

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மதுரையில் நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கேட்டு ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு முறையான கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதனையொட்டி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருந்து தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வரை ஊர்வலம் செல்ல முயன்றதால் போலீஸாருக்கும், இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர்கள் பாலமுருகன் (மாநகர்), ராகுல் (புறநகர்) மாவட்டச் செயலாளர்கள் வேல்தேவா (மாநகர்), பிருந்தா (புற நகர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT