மதுரை மாவட்டத்தில் பள்ளி களை திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடை பெற்றது.
கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச்சிலிருந்து பள்ளிகள் அடைக் கப்பட்டுள்ளன. இந்நிலையில் நவ.16-ல் இருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர் களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், கரோனா முழுவதும் நீங்காத வரை பள்ளிகளை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர் கருத்துகளைக் கேட்டு, முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள 531 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடந்த கூட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பங்கேற் றனர். அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமை வகித்தனர்.
இதில் பெரும்பாலான பெற் றோர், கல்வி பாதிக்கப்படுவதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்றனர். சிலர் கரோனா தொற்று 2-ம் கட்டமாக பரவி வருவதால் தற்போதைக்குப் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் எனவும், 2021 ஜனவரி மாதத்துக்குப் பின் பள் ளிகளைத் திறக்கலாம் என்றனர்.
பெற்றோர்களின் கருத்துகள் குறிப்பெடுக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் தெரிவித்தனர்.