அதிமுக ஆட்சியில் மதுரைக்கென எதையும் செய்யவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மதுரை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் சிறப்புக் கூட்டம் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. மாவட்டத்தில் 360 இடங் களில் நடந்த இக்கூட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பசுமலையில் நடந்த கூட்டத் தில் திமுக மூத்த நிர்வாகிகள் 550 பேருக்கு பொற்கிழி வழங்கப் பட்டது.
மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, எம்.மணிமாறன், எம்எல்ஏ.க்கள் பி.டிஆர்.பழனிவேல்தியாகராஜன், பா.சரவணன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா, முன் னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம் உள் ளிட்டோர் பேசுகையில், 2016-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமையாமல் போனதற்கு நாங்களும் ஒரு காரணம்தான். வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெறச் செய்வோம் என் றனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் பேசி யதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் முன் னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திமுக செயல்படுகிறது. மதுரையை மாநகராட்சியாக்கியது, மாவட்ட நீதிமன்றம் திறப்பு, உயர் நீதிமன்றக் கிளையை அமைத்தது, 27 கி.மீ. சுற்றுச்சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பல மேம் பாலங்கள் என திமுக ஆட்சியில் மதுரைக்காக நிறை வேற்றப்பட்ட திட்டங்களை பட்டிய லிட்டுக் கொண்டே செல்லலாம்.
அதிமுக ஆட்சியில் மதுரைக்கு என எதையும் செய்யவில்லை. தற்போது இருக்கும் மதுரையை கெடுக்காமல் இருந்தாலே போதும். எத்தனை கோடி செலவு செய்தாலும் மக்கள் சக்திக்கு முன்னால் அதிமுகவின் கனவு சிதைந்துபோகும். இது 2021 சட்டப் பேரவை தேர்தலில் நிரூ பணமாகும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.