ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க முதல்வர் எந்த சமரச மும் செய்து கொள்ள மாட்டார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
கபடி வீரர்களை சிறப்பிக்கும் வகையில் மதுரை செல்லூரில் மாநகராட்சி சார்பில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இதைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக அமைதிப் பூங்கா வாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தியது அப்போதைய முதல்வர் ஜெய லலிதா தலைமையிலான அதிமுக அரசுதான். நீட் இட ஒதுக்கீடு போன்று 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் முதல்வர் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார் என்றார்.