Regional02

20 சதவீத போனஸ் கோரி விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முற்றுகை

செய்திப்பிரிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையை போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

இதற்கு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டக் கவுன்சில் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். சிஐடியூ நிர்வாகி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.

தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், பண்டிகை முன் பணம் ஆகியவற்றை உடனே வழங்கக் கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அனைத்திந்திய தொழிற்சங்க சம்மேளனப் பொதுச் செயலர் பாண்டியன், பார்வர்டு பிளாக் பாலசுந்தரம், மதிமுக பரசுராமன், பணியாளர் சம்மேளனம் பொதுச் செயலர் ராமசாமி, விடுதலை சிறுத்தை கட்சி ஜான் பிரிட்டோ, தேமுதிக ஜோசப், ஹக்கீம் உட்பட அனைத்துக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT