Regional02

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம்

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் பொது நடைபாதையை மறித்து சிலர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்டோர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இவர்களுடன் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT