குடிநீர் வழங்காததைக் கண்டித்து விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். 
Regional02

20 நாளாக குடிநீர் வழங்காததை கண்டித்துவிருதுநகர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

செய்திப்பிரிவு

விருதுநகரில் 4, 5, 9, 10, 12 ஆகிய வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 20 நாட்களாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இக்குறிப்பிட்ட வார்டுகளில் ஆழ்குழாய் கிணறுகளும் பழுது சரி செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில் குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும் முன்னாள் கவுன்சிலர் பாட்சா ஆறுமுகம் மற்றும் 4, 5, 9, 10, 12 ஆகிய வார்டு மக்கள் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இவர்களுடன் மேலாளர் ஜெகதீஸ்வரி, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT