Regional02

ஊர்க்காவல் படைக்குஆட்கள் தேர்வு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் கூறியதாவது: மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 6 பணியிடங்கள் பெண் களுக்கானது. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற்தகுதி, நல்ல நடத்தை உள்ளவராகவும், சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

நவ.18 முதல் நவ.23 வரை சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண் ணப்பங்கள் விநியோகிக்கப் படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவ.23க்குள் அளிக்க வேண்டும்.

நவ.29-ல்சிவகங்கை ஆயுதப் படை மைதா னத்தில் சான்று சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு நடக்கும். வரும்போது அசல் கல்விச் சான்றுகளைக் கொண்டுவர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT