Regional02

வேப்பனப்பள்ளி அருகே குட்கா பறிமுதல்

செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளி அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளி எஸ்எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த வேனை தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் வாகனத்தில் சோதனையிட்டபோது, குட்கா பொருட்கள் இருந்தது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பண்டல்களில் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்துடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் தப்பியோடிய ஓட்டுநர், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT