கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மகாராஜன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் விவசாயி களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரி விக்க முடியவில்லை. எனவே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்.
போச்சம்பள்ளி வட்டம் மல்லிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு மற்றும் பெண்கள் அளித்த மனுவில், அம்மா இருசக்கர வாகனம் திட்டம் மூலம் இருசக்கர வாகனம் வாங்க, காவேரிப்பட்டணம் பிடிஓ., அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தோம். மானியத்திற்கான ஆணை பெற்ற பின்பு வாகனத்தை வாங்கினோம். உரிய ஆவணங்கள் காவேரிப்பட்டணம் பிடிஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தும் இதுவரை மானியத் தொகை விடுவிக்கவில்லை.
அதனால், மானியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.