தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்துக்கு தொமுச பொதுச் செயலாளர் மணி தலைமை வகித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த 300 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஈரோடு
தருமபுரி