Regional01

32 இடங்களில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

தீபாவாளி பண்டிகையை யொட்டி, புதுக்கோட்டை கிழக்கு ராஜ வீதி, அண்ணா சிலை, பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களில் பொருட்களை வாங் குவதற்காக தினமும் ஏராளமா னோர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க கிழக்கு ராஜ வீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் நேற்று திறந்து வைத்தார். மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர கண்காணிப்பு மேடையையும் அவர் பார்வை யிட்டார்.

SCROLL FOR NEXT