நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கக் கோரிவைப்பார் பகுதி பெண்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பகுதியில் உள்ள துலுக்கன்குலம், சங்கரநாராயணபுரம், ராமபுரம், கல்லூரணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தங்களுக்கு சரியாக வேலை கொடுப்பதில்லை எனக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
‘கரோனா ஊரடங்கால் தொடர்ந்து சில மாதங்களாக வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது தான் வேலை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 15 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறார்கள். அருகேயுள்ள குளத்தூர் ஊராட்சியில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கும் நூறு நாட்கள்வேலை கிடைக்க மாவட்ட ஆட்சியர்நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளர்.
விவசாயிகள்
மாற்றுத்திறனாளிகள்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர், நகர செயலாளர் பி.ஜலால் முகம்மது தலைமையில் அளித்த மனுவில், ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 12 இடங்களில் தாமிரத் தாது கொட்டப்பட்டதால், அந்த பகுதிகள் மாசடைந்துள்ளன. எனவே, அந்த இடங்களை அபாயகரமான இடங்களாக அறிவித்து, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அந்த பகுதிகளுக்கு செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.