Regional02

தீபாவளி உதவித்தொகை வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வரையிலான கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படும் என அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளில் சிலருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு அறிவித்தபடி சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்கு தீபாவளி பண்டிகை உதவித் தொகை புதுச்சேரி மாநில அரசு வழங்கியுள்ளதுபோல ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT