Regional01

லஞ்ச புகாரில் சிக்கிய கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

லஞ்ச புகாரில் சிக்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கடன் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதைக் கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கணக்கில்வராத ரூ.2.32 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் குணசேகரன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கோபி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT