Regional03

ராமநாதபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம்

செய்திப்பிரிவு

பரமக்குடி நகராட்சியில் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் பாபு, செயலாளர் ராக்லண்ட் மதுரம், நிர்வாகிகள் ஜீவா, ரமேஷ், அலெக்ஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சாயல்குடி பேரூராட்சி, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியிலும் தூய்மைப் பணியாளர்களுக்கும் முகக் கவசம், கை கழுவும் சோப் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT