Regional03

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதற்காக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், ஊழியர்கள், உயர் நீதிமன்றத்துக்கு வந்து செல்வோரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். சோதனை முடிவில் பலருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஜூன் மாதமே நேரடி விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தலைமை நீதிபதியும், உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் நேரடி விசார ணையைத் தொடங்குவது மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT