Regional01

கல்லாதோருக்கு எழுத்தறிவு: தன்னார்வலர்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் மூலம் கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்கும் திட்டத்தில் பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் நடந்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்காக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்போர் கல்வியறிவு மையங்களாக செயல்படவுள்ளன. தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

ஆர்வமுள்ள 10-ம் வகுப்பு முடித்த தன்னார்வலர்கள், பள்ளி களின் தலைமையாசிரியர்களை அணுகலாம். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்களும் தன்னார்வலர்களாக செயலாற்றலாம், எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT