Regional02

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கரோனா பேரிடர் காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனப் பணியாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி உள்ளனர்.

இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வுக்கு பணம் ஒதுக்கியபோதும், 108 ஆம்புலன்ஸ் சேவையை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தும் தனியார் நிர்வாகம் குறைவாக ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் ஜெயவேல், நிர்வாகிகள் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT