Regional01

இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி தில்லைநகர் வாமடம் சப்பானி கோயில் தெருவைச் சேர்ந்த சப்பானி மகன் வாழைக்காய் விஜய்(எ) விஜயன்(20). வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரை சிலர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சோமரசம்பேட்டை நாடார் சத்திரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த்(20), தென்னூர் வாமடத்தைச் சேர்ந்த குணசேகரன் (25), சிவபிரசாத் (19), ஜீவா நகரைச் சேர்ந்த பிரதாப்(22), கார்த்திக் (எ) கோளாறு கார்த்திக்(20), நிஷாந்த் (21) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெயச்சந்திரனை போலீஸார் தேடி வருகின்றனர். இவர் 13 வழக்குகளிலும், குணசேகரன் 3 வழக்குகளிலும், கோளாறு கார்த்திக் 3 வழக்குகளிலும், பிரவீன்காந்த் ஒரு வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT