Regional02

அறந்தாங்கி அருகே மணல் லாரி பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியா நிலை பகுதியில் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்து குடியிருப்பு பகுதியில் குவிப்பதாகவும், பின்னர் அங்கிருந்து அதை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் நேற்று அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு, இவர்களைக் கண்டதும் லாரியை விட்டு விட்டு அதன் ஓட்டுநர் தலைமறை வாகிவிட்டார். இதையடுத்து, லாரி மற்றும் அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் ஆகியவற்றை வருவாய்த் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.

SCROLL FOR NEXT