சாலையை சீரமைக்க கோரி திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

சாலைகளை சீரமைக்க கோரி மறியல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் பழுதான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயில் வரையிலான பேட்டை செல்லும் சாலை மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இச்சாலை மாறியிருக்கிறது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் காட்சி மண்டபம் பகுதியில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி டவுன் போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT