Regional02

மருத்துவ முகாம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தென்காசி மெடிக்கல் சென்டர் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ரஜாய் தலைமை வகித்தார்.

தமுமுக மாநில செயலாளர் நயினார் முகமது நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முகாமில், 10 மருத்துவர்கள், திருநெல்வேலி கேன்சர் கண்டறியும் குழுவினர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த பிரிவு கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT