வெளிநாடுகளில் இருந்து உடமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 2.674 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த சம்சுதீன்(32) என்பவர் உடமைகளுக்குள் மறைத்து வைத்து 2.674 கிலோ எடையுள்ள ரூ.1.39 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து, தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.