புது டில்லி, ராஜஸ்தான், கர் நாடகா, மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை, அம்மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என தமிழக சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அதன் மாநில அமைப்பாளர் எச். ஆதிசேஷன் கூறியதாவது:
டில்லி, ராஜஸ்தான், கர் நாடகா, மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களில் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட் டாசு வெடிப்பது தொடர்பாக முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் தடை விதிப்பதை ஏற்க முடியாது. சில ஆண்டுகளாகவே பட்டாசுகள் தொடர்பாக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளாக சட்ட விரோ தமாக இறக்குமதி செய்யப்பட்ட சீன பட்டாசுகளால்தான் காற்று மாசுபடுதல் அதிகமானது. சீன பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கந்தகம் அதிக அளவில் உள்ளதால், மாசுப் படுதலும் அதிகமாக இருந்தது. இதனால் சீனப் பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நமது நாட்டில் உற்பத்தியாகும் பசுமை பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் கலக்கப் படுவதில்லை.
மேலும் அலுமினியம், லித்தியம், ஆர்சனிக் மற்றும் பாதரசமும் குறைந்தளவே பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் சிவகாசி மற்றும் மேற்கு வங்காளத்தில் சில இடங்களில் நடைபெற்று வரும் பட்டாசு தொழிலில் லட்சக் கணக்கான குடும்பங்களின் வாழ் வாதாரமும் அடங்கி உள்ளது. பட்டாசு வெடிக்கத் தடை விதித்தால், அந்தத் தொழிலாளர்களின் வாழ்வு முடங்கி விடும்.
தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே, பட்டாசு வியாபாரம் பெருமளவு நடக்கும். ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பின் பயன் அறுவடையாகும் கால கட்டத்தில் தடை விதிப்பது தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
உச்ச நீதிமன்றமே 2018-ல் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்துள்ளது. அதைக் கருத்தில் கொள்ளாமல் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிப்பதை ஏற்க முடியாது. எனவே டில்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம், ஒரிசா அரசுகள் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.