Regional02

பசும்பொன் குருபூஜை விழாவில் விதிமீறல் 313 வழக்குகள் பதிவு; 63 பேர் கைது

செய்திப்பிரிவு

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றவர்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக 313 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 28.10.2020-ம் தேதி முதல் 30.10.2020-ம் தேதி வரை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் 144 தடை உத்தரவை மீறியும், மாவட்ட நிர்வாக அனுமதி பெறாமலும் விதிமீறலில் ஈடு பட்ட வாகனங்கள் மற்றும் நபர்களைக் கண்டறிய தொழில்நுட்ப காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கமுதி, பரமக்குடி, முது குளத்தூர், ராமேசுவரம் ஆகிய உட்கோட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 37 நான்கு சக்கர வாகனங்கள், 53 இருசக்கர வாகனங்கள் மற்றும் 17 கிராமங்களைச் சேர்ந்த நபர்கள் மற்றும் 2 அமைப்புகள் என 313 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

இதில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT