ஆண்டிபட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளது. ரேஷன் கடைகள், சத்துணவு மையங்களுக்கான குடிமைப் பொருட்கள் இங்கிருந்து விநியோகம் செய்யப்படும். இங்கு பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே கரோனாவால் வேலை இழந்துள்ள தங்களுக்கு அரசு வழக்கம்போல 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.