இந்திய தேசிய இளைஞர் கவுன்சில் மற்றும் ட்ரூ அண்ட் ஹெல்த் ஒர்க்கவுட் இணைந்து நடத்திய 20 நிமிட இணையவழி பிட்நெஸ் உடற்பயிற்சி நிகழ்வு, பொது முடக்கத்தின் போது அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டோக் பெருமாட்டி கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் டி. சாந்தமீனா வரவேற்றார். டேக்வாண்டோ பயிற்றுநர் என். நாராயணன் முன்னிலை வகித்தார்.
விழாவின் ஒருங்கிணைப்பாளர் காட்வின் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் (சுயநிதிப் பிரிவு) எம். ஹேமலதா நன்றி கூறினார். சாதனையாளர்களான ராஜேஸ், பிரியன், ஹில்டா, ஸ்ருதி, பிரகாஷ் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.