அலங்காநல்லூர் அருகே 15பி. மேட்டுப்பட்டியில் சில வாரங்களுக்கு முன்பு மதுக் கடை அமைக்கும் முயற்சியை அறிந்த அப்பகுதி பெண்கள் ஆட்சியர், டாஸ்மாக் மேலாளரிடம் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை மதுக்கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் கடை முன் திரண்டனர்.
பின்னர் அலங்காநல்லூர்-ஊமச்சிகுளம் சாலையில் மறி யல் செய்தனர். போலீஸார், வட்டாட்சியர் பழனிக்குமார் மக் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.