தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் துறைமங்கலத் தில் அமராவதி கூட்டுறவு அங்காடி சார்பில் பட்டாசு கடை நேற்று திறக்கப்பட்டது.
இந்த கடையை குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பெரம்பலூர் எம்எல்ஏ இரா.தமிழ்ச்செல்வன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழாண்டு அமராவதி அங்காடி மூலம் ரூ.50 லட்சத்துக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.