Regional02

ஒடிசாவுக்கு ரயிலில் 2,658 டன் கொசுவலை அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

கரூரிலிருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2,658 டன் கொசுவலைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.51.20 லட்சம் வருவாய் கிட்டியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்துக்குட்பட்ட கரூரிலிருந்து ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வர் மற்றும் குர்டா சாலை ஆகிய பகுதிகளுக்கு சரக்கு ரயில் மூலம் அண்மையில் ரசாயன பூச்சுக்கொண்ட கொசுவலைகள் அனுப்பிவைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கரூர் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு 42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 2,658 டன் கொசுவலைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.51.20 லட்சம் வருவாய் கிட்டியுள்ளது என சேலம் கோட்ட ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT